Monday, February 23, 2009
சிகாகோவில் கே.ஜே. யேசுதாஸ்
ஆகஸ்ட் 28, 2004 தேதி ஓணம் பண்டிகை அன்று சிகாகோ தமிழ்ச்சங்கமும், சங்கரா விழி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இன்னிசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களின் செவிகளில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது. தமிழ், மலையாளத் திரைப்படங் களிலிருந்து அவர் பாடிய பாடல்கள் அருமை. முன்னதாக மகாகணபதி என்ற நாட்டை ராகப் பாடலுடன் (சிந்து பைரவி) களை கட்டத் தொடங்கிய நிகழ்ச்சி, 'அதிசய ராகத்தில்' (படம் 'அபூர்வ ராகங்கள்', ராகம் மஹதி) ரசிகர்களை அதிசயிக்க வைத்தது. தொடர்ந்த 'விழியே கதை எழுது' என்ற பாடலின் நடுவே வருகிற 'தீபம் எரிகின்றது, ஜோதி தெரிகின்றது' என்ற வரிகள் சங்கரா விழி அறக்கட்டளையின் குறிக்கோளான '2020ஆம் ஆண்டிற்குள் கண்பார்வை சரி செய்த'லைப் பிரதிபலிப்பதாக இருந்தது.மூன்றாம்பிறையிலிருந்து 'கண்ணே கலைமானே', வருஷம் 16ல் வரும் 'பழமுதிர் சோலை' போன்ற நினைவைவிட்டு அகலாத முத்தான பாடல்களைப் பின்னர் பாடினார். இடைவேளைக்குப் பின் அவர் பாடிய மன்னன் படத்தின் 'அம்மா என்று அழைக்காத' பாடல் அன்றைய நிகழ்ச்சியின் மகுடம்.தொடர்ந்து 'தந்தன தந்தன', 'பச்சைக் கிளிகள்', 'மாசி மாதம்' போன்ற பாடல்கள் பரவாயில்லை ரகம். ரஜினியின் தளபதி படப்பாடல் அமர்க்களம். உள்ளூர்க் கலைஞர்களுக்கும் அன்று பாட வாய்ப்புத் தந்தது யேசுதாஸ் அவர்களின் பெருந் தன்மையைக் காட்டியது. கலைவிழாவை நிறைவு செய்ய 'மாடி மீது மாடி' பாடலுடன் இவர் முடித்த போது இன்னும் கொஞ்சம் பாடமாட்டாரா என்று ஏங்காத நெஞ்சம் இல்லை. யேசுதாசுடன் பாடிய சிந்து மற்றும் அனிதா கிருஷ்ணா ஆகியோருக்கு நல்ல குரல் வளம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment