Monday, February 23, 2009

தெய்வீகக் குரலோனே!

தெய்வீகக் குரலோனே! தெய்வத்தாயே!
சபரியில் ஐயப்பனையும், குருவாயூரில்
குருவாயூரப்பனையும் துகிலுறச் செய்வது உன் தாலாட்டுக் குரலல்லவா!!எனவேத் தான் நீ தெய்வத்தாயானாய்!
உன் வறுமையை திறமையுடன்
விதைத்துபெருமையை அறுவடைச் செய்தவன் நீ!!
உன் குரலெனும் மகுடி கொண்டு மக்கள்மனங்களை தன் வசமாக்கினாய்!உன்னை சாதிக்கொண்டு சிறையிட்டனர்நீயோ 'சாதி'த்து அந்த சிறையுடைத்துபவணி வந்தாய் இந்த அவணி மீது!
ஏழிசை உட்கொண்டு குரல் யாழிசையாய் பொழிகின்றாய்!
இசைக்கிசையாத உயிருமுண்டோ?! -
உன்குரலுக்கு குளிராத இதயமுண்டோ?
இனிய இசைவாழ! நீ வாழியப் பல்லாண்டு!!!!

No comments:

Post a Comment