Monday, February 23, 2009

எல்லா மனிதர்களும் ஒரே கடவுளின் பிள்ளைகள்

குருவாயூரப்பனின் அத்யந்த பக்தரான செம்பை வைத்தியநாத பாகவதர் வழக்கம்போல மலையாள மாதத்தின் முதல்நாள் சன்னதியில் பாடுவதற்காக போனார்.ஆலய நிர்வாகத்தினரால் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப் பட்டார்.ஆலய வளாகத்துக்குள்ளே அவர் பாடுவதற்கான மேடையும் தயாராக இருந்தது.பகவானை தரிசித்த பின்னர் பாடுவது அவர் பின்பற்றும் நடைமுறை.அதற்காக தன்னுடன் அழைத்து வந்திருந்த அருமைச் சீடனையும் கூட்டிக் கொண்டு சன்னதிக்குள்ளே போகத் தயாரானார்.சற்றுத் தயக்கத்துடனும் ஆனால் கறாரான முறையில் ஆலய நிர்வாகிகள் அவரிடம்தெரிவித்தார்கள்: "சுவாமி மட்டும் ஆலயத்துக்குள் பிரவேசிக்கலாம்.தாங்கள் அழைத்து வந்திருக்கும் சீடனை அனுமதிக்க முடியாது.ஏனெனில் அவர் இந்துவல்ல"அதிர்ந்துபோன செம்பை வைத்தியநாத பாகவதர் வருத்தத்துடன் பின்வாங்கினார்."நான் வந்தது என்னுடைய சீடனுடன் சேர்ந்து பாடி குருவாயூரப்பனைப் போற்றத்தான்.அவனில்லாமல் பாடவேண்டுமென்றால் நான் சன்னதிக்குள் வரவில்லை.நாங்கள் இங்கே அமர்ந்தே பாடுகிறோம்.அதை பகவான் கேட்பார்" என்றார்.சொன்னபடியேஅவருடைய அன்றைய கச்சேரி கோவில் மதிலுக்கு அப்பால் நடந்தது.சீடன் கண்ணீர் மல்க குருவுடன் சேர்ந்து பாடினார்.அந்த சீடன் பிரபல இசைக்கலைஞர் கே.ஜே.யேசுதாஸ்

1 comment:

  1. நல்ல குரு, நல்ல சிஷ்யர்.

    ReplyDelete